‘முடியாது’ என்று பின்வாங்கிய சஜித்திற்கும் அநுரவிற்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி முடியாது என துரத்த வேண்டும்
முடியாது’ என்று பின்வாங்கிய சஜித்திற்கும் அநுரவிற்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி முடியாது என துரத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன எம்.பி குறிப்பிட்டார்.
எஹலியகொட புதிய சந்தைக்கு அருகில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாம் இதற்கு முன்னர் ஒரு கட்சி சார்பாகத் தான் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்துள்ளோம். சுதந்திரக் கட்சியில் இருந்து சந்திரிகா குமாரதுங்கவை தெரிவு செய்தோம். பின்னர் எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தோம். பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவை மொட்டுக் கட்சியில் இருந்து தெரிவு செய்தோம். இன்று நாட்டை மீட்பதற்காக 30 இற்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. கட்சியில் வகித்த எமது பதவிகளை ஒதுக்கி மீண்டும் நெருக்கடியில் விழாமல் இருக்க ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைக்கும் போராட்டத்தில் குதித்துள்ளோம்.
2022 இல் வீதிகளில் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. காட்டுச்சட்டம் அமுலானது. இராணுவமும் பொலிசும் செய்வதறியாதிருந்தன. காட்டுச் சட்டத்தை ஒதுக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே நாட்டுத் தலைவரின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை நிறைவேற்றிய ரணில் விக்ரமசிங்கவை நாம் உயர்வாக மதிக்கிறோம். அன்று ‘முடியாது’ என்று பின்வாங்கிய சஜித்திற்கும் அநுரவிற்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி முடியாது என துரத்த வேண்டும்” என்றார்.