SLPP ஆதரவாளர்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக ஒன்று திரண்டுள்ளனர்
SLPP ஆதரவாளர்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக ஒன்று திரண்டுள்ளனர் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி குறிப்பிட்டார்.
எஹலியகொட புதிய சந்தைக்கு அருகில் இன்று (28) பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எஹலியகொட வரலாற்றில் மிக வெற்றிகரமான கூட்டமொன்றை நடத்த முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தாய்நாட்டை வெல்ல வைப்பதற்கே இன்று பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். பொதுஜன பெரமுன. சு.க,ஐ.தேக, இ.தோ.க, இடது சாரி கட்சிகள் என அனைத்து கட்சிகளும் நாட்டின் ஸ்தீரத்தன்மையை உறுதி செய்யவே இன்று இணைந்துள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் நேரடி வரியையும் மறைமுக வரியையும் குறைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன ஆட்சியில் பொருளாதார வித்துவான்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதேபோன்ற ஒன்றை செய்ய முற்பட்டதாலே நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிய நோயாளி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த நோயாளியை மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பப் போகிறோமா? குணப்படுத்தப் போகிறீர்களா?
போட்டி போட்டுக் கொண்டு சஜித்தும் அநுரவும் வாக்குறுகளை அடுக்குகிறார்கள். எப்படியாவது வெல்வதற்காக வாக்குறுதிகளை அள்ளிவழங்கும் அரசியல் இனியும் தேவையில்லை. நிவாரணப் பொதிகளை காட்டி தேர்தல் கோரும் கோமாளிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்லக் கூடிய சாத்தியமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக ஒன்று திரண்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.