நபரொருவரை தாக்கி கொலை செய்துவிட்டு யானை தாக்கியதாக கூறி நாடகமாடிய நால்வர் கைது #இலங்கை
![](wp-content/uploads/2024/07/FB_IMG_1720687368751-780x803.jpg)
பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரலமுல்ல பகுதியில் நபரொருவரை தாக்கி கொலை செய்துவிட்டு யானை தாக்கியதாக கூறி நாடகமாடிய நால்வர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரலமுல்ல பகுதியில் கடந்த 7 ஆம் திகதி யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் யானை தாக்குதலுக்கு இலக்காகவில்லை என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தனிப்பட்ட தகராறு காரணமாக சில நபர்களால் தாக்கப்பட்டு பின்னர் யானை தாக்கியது போன்று தேவாலயம் ஒன்றிற்கு அருகில் கொண்டுவரப்பட்டு விடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காயமடைந்தவரை அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மஹியங்கனை மற்றும் கிராதுருகோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18,24, 28 மற்றும் 35 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://madawalaenews.com/wp-content/uploads/2024/07/wtsbanner.jpg)
![](https://madawalaenews.com/wp-content/uploads/2024/07/fbbanner.jpg)