News
கட்டுநாயக்கவிலிருந்து 202 பயணிகளுடன் புறப்பட்ட துருக்கி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் தரையிறங்க நடவடிக்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 202 பயணிகளுடன் துருக்கி நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று, ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் விமான நிலையத்திலே தரையிறங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தக் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து, விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன



