News
நேற்றிரவு நபர் ஒருவரை கொன்றுவிட்டு தப்பியோடிய நபர் – இறந்தவரின் தரப்பில் சுமார் 50 பேர் வந்து சந்தேக நபரின் வீட்டை தீ வைத்து எரித்தனர்

தனிப்பட்ட தகராறின் காரணமாக நேற்று (16) இரவு 11.40 மணியளவில் வோகன்வத்த, மத்துகம பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலையைச் செய்த நபர் அப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் தொடங்கொடயைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரின் வீட்டுக்கு சுமார் 50 பேர் வந்து இன்று (17) தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச் சென்றவரை தேடும் பணிகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



