MP சலுகைகள் நீக்கப்படும் என்பது வெறும் தேர்தல் வாக்குறுதி ; ஹர்ஷன
தமது அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கபடும் வாகன பேர்மிட் , ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லம் ஆகிய சலுகைகள் நீக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி கூறினாலும் அக்கட்சி பாரளுமன்ற உறுப்பினர் அனைவரும் மேல் குறிப்பிட்ட அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜபகருணா கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கட்சித் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமது அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கபடும் வாகன பேர்மிட் , ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லம் ஆகிய சலுகைகள் நீக்கப்படும் அந்த விஞ்சாபனத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் எந்த ஒரு உறுப்பினர்களும் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை விட்டுக்கொடுத்தாக வரலாறு இல்லை எனவும் இது ஒரு தேர்தல் வாக்குறுதி மட்டுமே என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜபகருணா கூறினார்.