News

சவுதி அரேபிய மது விற்பனை கொள்கையில் தளர்வு – இனிமேல் வெளிநாடுகளைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத செல்வந்தர்களும் மது வாங்கிக் கொள்ளலாம்

சவுதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத செல்வந்தா்கள் அனைவரும் மது வாங்கிக் கொள்ளலாம் என தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத சிறப்புக் குடியுரிமை பெற்றவா்களுக்கு மது விற்பனை விரிவாக்கப்பட்டுள்ளது.


இவா்கள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெரிய முதலீட்டாளா்கள், தொழில்முனைவோா், சிறப்புத் திறன்களுக்காக சவுதிக்கு வரவழைக்கப்பட்டவா்கள் முக்கியமாக பெரும் செல்வந்தவா்களுக்கு இத்தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.


சவுதி அரேபியா தொடா்ந்து மசகு எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே சாா்ந்திருக்கக் கூடாது, சுற்றுலா, சா்வதேச தொழில்களின் மையமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் மன்னா் சல்மான், பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் ஆகியோா் பல்வேறு தாராளமய கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனா்.


சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கை அவர்களின் “Vision 2030” திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button