Squash விளையாட்டின் சாதனை வீராங்கனை ஃபதூம் இஸ்ஸடீன் அன்று பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ள தயாராக இருந்த போது அவருக்கு வெட்டு விழுந்தது… வெட்டியது வேறு யாருமல்ல, தற்போது தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பாடசாலை மேடையில் பேசிய மாணவியின் தந்தையான தேசிய பயிற்சியாளர்தான்

Zaleeha Fathoum Issadeen, எமது தேசத்தின் கீர்த்திமிகு Squash வீராங்கனை.
மூன்று முறை (2019, 2020, 2021) தொடர்ச்சியாக National Champion.
இரண்டு முறை தெற்காசிய போட்டிகளில் Bronze medalist.
விளையாட்டு துறையை விட்டு விலகி வீட்டில் இருக்கிறார்.
விலகினாரா? விலக நிர்ப்பந்திக்கப்பட்டாரா? என்ற தகவல்களை அவரது சகோதரரிடமிருந்து (அவரும் Squash National Champion) அறியமுடிந்தது.
தற்போது பேசு பொருளாகியிருக்கும் சிறிமாவோ வித்தியாலய மாணவியின் தந்தையாரே இலங்கை Squash தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்.
ஃபதூம் Squash துறையில் இவ்வளவு சாதனைகள் செய்து விட்டு பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ள தயாராக இருந்த போது அவருக்கு வெட்டு விழுந்தது.
வெட்டியது வேறு யாருமல்ல, தற்போது தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பாடசாலை மேடையில் பேசிய மாணவியின் தந்தையான சாட்ஷாத் National Coach அவர்கள்தான்.
ஃபதூமை வெட்டி விட்டு அந்த இடத்திற்கு Commonwealth game விளையாட அனுப்பப்பட்டவர் வேறு யாருமல்ல இந்த “நீதி வேண்டி” போராடும் மாணவிதான்.
Commonwealth போட்டிகளில் பங்கேற்பதற்கான trials நிகழ்ந்த போது கூட இந்த மாணவி ஃபதூமிடம் தோல்வி கண்டிருந்தார் என்பது மேலதிக தகவல்!
Video https://youtu.be/iaBiagxYOV8?si=M9TSsIfYeOIQr-uY
இது தொடர்பில் பிரபல ஊடகவியலாளர் சமுதித்த உடன் அவர் பகிர்ந்த விடயங்கள் வீடியோ https://youtu.be/k_wSpvcTL_U?si=nf84kUB-MY6c-Yw8
தனக்கான வாய்ப்பு தட்டிப்பறிக்கப் படாமல் இருந்திருந்தால் சர்வதேச அளவில் இலங்கைக்காக Zaleeha Issadeen பல பதக்கங்களை பெற்றிருக்கக்கூடும்.
சப்தமாக குரல் எழுப்புபவர்கள் எல்லோரும் நியாயவான்களாக இருக்க வேண்டும் என்றோ ஒடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றோ எந்தக் கட்டாயமும் இல்லை. அதுவும், பெரும் பலமான பின்புலம் உள்ள தந்தையை மேடைக்கு கீழே தயாராக வைத்துக்கொண்டு மேடையில் இருக்கும் அரச ஊழியரான பாடசாலை அதிபர் ஒருவருக்கு சவால் விடுக்கும் ஒருவர் நியாயவானாக இருக்க வேண்டும் என்றோ அல்லது ஒடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்றோ எந்தக் கட்டாயமும் இல்லை.
2019, 2020, 2021 வருடங்களில் தொடர்ச்சியாக மூன்று தடவை இலங்கையின் squash champion ஆக தெரிவுசெய்யப்பட்டு 2022 ஆண்டில் உலகத் தர வரிசையில் 150 ஆவது இடம் வரை முன்னேறிய Fathoum Zaleeha Issadeen என்ற squash வீராங்கனை, 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொள்வதை அநியாயமாக தடுத்து நிறுத்தி, அதனால் ஏற்பட்ட இடைவெளிக்கு அழைத்து வரப்பட்ட புதிய விளையாட்டு வீராங்கனை யார்?
இடைவெளி நிரப்பியவரின் தந்தை யார்? என்று தேடிப் பார்த்தால் ஃபதூமை வெட்டி விட்டு அந்த இடத்திற்கு Commonwealth game விளையாட அனுப்பப்பட்டவர் வேறு யாருமல்ல இந்த “நீதி வேண்டி” போராடும் மாணவிதான். வெட்டியது வேறு யாருமல்ல, தற்போது தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பாடசாலை மேடையில் பேசிய மாணவியின் தந்தையான சாட்ஷாத் National Coach அவர்கள்தான். ( Husni jabir )



