Squash விளையாட்டின் சாதனை வீராங்கனை ஃபதூம் இஸ்ஸடீன் அன்று பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ள தயாராக இருந்த போது அவருக்கு வெட்டு விழுந்தது… வெட்டியது வேறு யாருமல்ல, தற்போது தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பாடசாலை மேடையில் பேசிய மாணவியின் தந்தையான தேசிய பயிற்சியாளர்தான்

By : முஜீப் இப்ராஹிம்
Zaleeha Fathoum Issadeen, எமது தேசத்தின் கீர்த்திமிகு Squash வீராங்கனை.
மூன்று முறை (2019, 2020, 2021) தொடர்ச்சியாக National Champion.
இரண்டு முறை தெற்காசிய போட்டிகளில் Bronze medalist.
ஃபதூம் இஸ்ஸடீன் இப்போது எங்கே இருக்கிறார்.
விளையாட்டு துறையை விட்டு விலகி வீட்டில் இருக்கிறார்.
விலகினாரா? விலக நிர்ப்பந்திக்கப்பட்டாரா? என்ற தகவல்களை அவரது சகோதரரிடமிருந்து (அவரும் Squash National Champion) அறியமுடிந்தது.
தற்போது பேசு பொருளாகியிருக்கும் சிறிமாவோ வித்தியாலய மாணவியின் தந்தையாரே இலங்கை Squash தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்.
ஃபதூம் Squash துறையில் இவ்வளவு சாதனைகள் செய்து விட்டு பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ள தயாராக இருந்த போது அவருக்கு வெட்டு விழுந்தது.
வெட்டியது வேறு யாருமல்ல, தற்போது தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பாடசாலை மேடையில் பேசிய மாணவியின் தந்தையான சாட்ஷாத் National Coach அவர்கள்தான்.
ஃபதூமை வெட்டி விட்டு அந்த இடத்திற்கு Commonwealth game விளையாட அனுப்பப்பட்டவர் வேறு யாருமல்ல இந்த “நீதி வேண்டி” போராடும் மாணவிதான்.
Commonwealth போட்டிகளில் பங்கேற்பதற்கான trials நிகழ்ந்த போது கூட இந்த மாணவி ஃபதூமிடம் தோல்வி கண்டிருந்தார் என்பது மேலதிக தகவல்!
ஃபதூம் தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக பேசுவதற்கு அப்போது மேடையொன்று கிடைக்கவில்லை.
Publicity crisis இற்குள் அகப்பட்டு சிரமப்படுவதை விரும்பாத ஃபதூம் விளையாட்டை விட்டு விலகி வீட்டுக்குள் முடங்கியதாக சொல்கிறார் அவரது சகோதரர்.
நீதி மன்றம் உங்கள் முன் திறந்திருக்கிறது.



