News
சட்டவிரோத சாமானை வைத்திருந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 3 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற ஓ.ஐ.சி கைது

கம்பஹா பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி 3 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பொருட்களை வைத்திருந்த நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, மூன்று இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.



