News
தெஹிவளை, (மெரின் டிரைவ்) பகுதி ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அதன் உரிமையாளர் உயிரிழப்பு

தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளரே இதில் உயிரிழந்தார்.



