25 ஆண்டுகால சேவையை கௌரவிப்போம் – வீடற்ற முஅத்தின் அவர்களுக்கு உதவுவோம் !

திருகோணமலை மாவட்டம், கந்தளாய் பேராற்று வெளி ஜும்மா மஸ்ஜிதில் கடந்த 25 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் முஅதினாக பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றுள்ள மஜித் மகுரூப் அவர்களுக்கு நிரந்தரமான ஒரு தங்குமிடத்தை அமைத்துக் கொடுக்கும் மனிதநேய முயற்சியில், பேராற்று வெளி ஜும்மா மஸ்ஜித் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
கந்தளாய் 03/1 பேராறு எனும் முகவரியில், மஸ்ஜித் நிர்வாகத்தின் முயற்சியால் மகுரூப் அவர்களுக்கான வீடு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும், தற்போது நிலவும் பொருளாதார சிக்கல் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, அந்த கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக சமூகத்திற்காக தன்னலமின்றி பணியாற்றிய ஒரு முதியவரை கௌரவிப்பதும், அவருக்கு பாதுகாப்பான ஒரு வீட்டை அமைத்துக் கொடுப்பதும் நமது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பாகும். எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து, அந்த வீட்டை அவரிடம் கையளிப்பதற்கு தற்போது பெருமளவு நிதி தேவைப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் கொடையாளிகள், தனவந்தர்கள் மற்றும் நல்லுள்ளம் கொண்டவர்கள், தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி, இந்த மனிதநேயப் பணியை நிறைவு செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
“யார் ஒரு முஃமினின் துன்பங்களில் ஒன்றை நீக்குகிறாரோ, அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்குகிறான்.”
உதவிகளை வழங்க தொடர்பு கொள்ளவும்:
*முஅதின் மஜித் மகுரூப் 0712100888
நிதியுதவி வழங்க விரும்புவோர் அல்லது மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர்,
பேராற்று வெளி ஜும்மா மஸ்ஜித் நிர்வாகத்தினரை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.
தொடர்புகொள்ள:
பள்ளிவாசல் நிர்வாகியின் தொலைபேசி எண் 0712100888
நிர்வாகம், பேராற்று வெளி ஜும்மா மஸ்ஜித், கந்தளாய்
கந்தளாய் யூசுப்




