News
மழை காரணமாக வீதியில் இருந்து வழுக்கிச் சென்று நீரோடையில் விழுந்த பாரஊர்தி
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தேயிலை கொழுந்து ஏற்றிச் செல்லும் பார ஊர்தி வீதியை விட்டு விலகி டெவோன் பகுதியில் உள்ள நீர் ஓடையில் விழுந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது .
பார ஊர்தியின் சாரதி சிறு காயங்களுடன் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் தொடர் மழையுடன் ஏற்பட்ட வீதி வழுக்கள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என தெரியவருகிறது.