“LGBTQI+ சுற்றுலா ஊக்குவிப்பு கடிதத்தை அரசாங்கம் வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு.”

LGBTQI+ சமூகத்தை மையப்படுத்தி இந்நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த திட்டத்தை கைவிடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் தலைவர் இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த உத்தியோகபூர்வ கடிதத்தை வாபஸ் பெறுவதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த சுற்றுலாத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், இந்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டது.



