News

பூனைக்கு அநியாயம் செய்த நபர் கைது செய்யபட்டு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் .

சமூக வலைதளங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய, பூனை ஒன்று கொடூரமாக சித்திரவதை செய்யப்படும் காணொளி தொடர்பான விசாரணைகளை அடுத்து, 26 வயதுடைய இளைஞர் ஒருவரை வலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் காணொளி பரவியதைத் தொடர்ந்தும், விலங்கு நல அமைப்புகளின் பலத்த எதிர்ப்பினை அடுத்து, காணொளியில் காணப்பட்ட சந்தேகநபரை பெப்ரவரி 8ஆம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் திப்பொட்டுகொட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய மெக்கானிக் (mechanic) ஆவார்.

அவர் அன்றைய தினமே வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பெப்ரவரி 24ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேகநபரின் மனநிலை குறித்து மருத்துவப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button