News

அனுரகுமார திஸாநாயக்கவினாலே சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து மலையக மக்கள் இன்று பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

“இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவின் ஊடாக மாத்திரமே பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய  சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.” என மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்

1750 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) மாலை மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றதுடன் இதில் கருத்து தெரிவிக்கும் போதே போது மக்கள் இதனை கூறியுள்ளனர்.

இதில் பொதுமக்கள் பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியினை வெளிபடுத்தியுள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இதன் போது அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

“ மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கலாகிய நாங்கள் ஒவ்வொரு முறையும் சம்பள அதிகரிப்பை கோரி வீதிக்கு இறங்கி பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த போதும் பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே இதுவரை காலம் காணப்பட்டது. இலங்கை வரலாற்றில் இதுவரை எட்டு ஜனாதிபதிகள் இருந்த காலப்பகுதியிலும் எங்களுடைய சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வில்லை ஆனால் 09வது ஜனாதிபதியாக கெளரவ அனுரகுமார திஸாநாயக்க வந்தவுடன் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் சம்பளம்  பெற்றுக் கொடுத்தார்.” என மக்கள் தெரிவித்தனர்

எஸ். சதீஸ்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button