News
போதைப் பொருள் விற்று வாங்கிய 2 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வீடு அதிகாரிகளால் கையகப்படுத்தப் பட்டது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தற்போது சிறையில் உள்ள தீகல சமன் எனும் அஜித் பெரேராவின் 2 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு வீடொன்றை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.
குறித்த வீடானது, அவிசாவளை, தெஹியோவிட்ட பகுதியில் அமைந்துள்ளது.
குறித்த வீடானது, போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த வீட்டை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



