News
தம்பதியினரிடையே நீண்ட காலமாக கருத்து முரண்பாடு, தகராறுகள் இடம்பெற்று வந்த நிலையில் வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில் மனைவி உயிரிழந்த சம்பவம் பதிவு #இலங்கை

வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து வெள்ளிக்கிழமை (13) அன்று உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் மெதகம, பரசங்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ஏகநாயக்க (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தம்பதியினரிடையே நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கணவர் வௌ்ளிக்கிழமை (13) அன்று வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெட்ரோல் குண்டினால் வீடு தீப்பிடித்து எரிந்ததோடு, மனைவி வீட்டினுள் தீப்பிடித்து இறந்தார்.
சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டார், அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



