VIDEO > நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த ஆண் மற்றும் பெண் மீது துப்பாக்கிச் சூடு – இருவரும் பலி #தலங்கம

தலங்கம – அக்குரேகொட பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்குரெகொடவிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது வாகனத்திற்குள் இருந்த பாதிக்கப்பட்டவர்கள், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பலியானவர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் அடையாளங்கள் குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்காக தலங்கம காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Video https://youtu.be/cWoRsQxsAw4?si=Y1gH10uWguM6-H4E



