News

மின் கட்டணத்தை 13.56% வீதத்தினால் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு மின்சார சபை கோரிக்கை முன்வைத்தது..

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு அந்த யோசனையின் மூலம் கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த மின்சாரக் கட்டணத் திருத்தக் கோரிக்கையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.

Recent Articles

Back to top button