லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 22 மற்றும் 20 வயதுடைய இருவர் உயிரிழப்பு

ஹிங்குராணை – தமன்ன பிரதான வீதியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பரணகம வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எதிரெதிர் திசைகளில் பயணித்த இரு வாகனங்களும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த 22 மற்றும் 20 வயதுடைய இருவரே இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர். பிரதேசவாசிகளினால் தமன்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது லொறி தமன்னவிலிருந்து ஹிங்குராணை நோக்கி பயணித்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் அதற்கு எதிர்த்திசையில் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த லொறி சாரதி தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



