News
2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு

2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு என தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் (NCE) ஏற்பாடு செய்திருந்த 33 ஆவது “NCE ஏற்றுமதி விருதுகள் – 2025” நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் 17.2 பில்லியன் டொலர் என்ற மிக உயர்ந்த ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடிந்ததாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
“கடன் இல்லாத, வெளிநாடுகளில் தங்கியிருக்காத, சுதந்திரம் மற்றும் தனித்துவத்தைப் பேணுகின்ற வலுவான உள்நாட்டுப் பொருளாதாரத்தைக்” கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



