News

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்தது சிறப்பு என தெரிவிக்கும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் – டாஸ் வென்றும் பேட்டிங்கை தூக்கி எதிரணிக்கு கொடுத்த பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தல் வெற்றியை பெற்றது. வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “இந்த வெற்றி இந்தியாவுக்கானது என்று நினைக்கிறேன். நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என நினைத்தோமோ அதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டோம். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்தது சிறந்த முடிவு. இஷான் சற்றே வித்தியாசமாக யோசித்து விளையாடினார். 0/1 என்ற நிலைக்கு சென்றபோது, யாரோ ஒருவர் பொறுப்பேற்க வேண்டியிருந்தது; அவர் எடுத்த விதம் அருமையாக இருந்தது.

நினைத்த மாதிரி விளையாடிவிட்டோம்: இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெருமிதம்.


முதலில் பேட்டிங் செய்யும் போது கணிப்பது சற்று கடினம். ஏனெனில் பனி இருக்கும் என்பதையோ, விளக்குகளின் கீழ் மைதானம் எப்படி செயல்படும் என்பதையோ முன்கூட்டியே அறிய முடியாது. ஆனால் எங்கள் கணிப்பில், எங்கள் ஸ்கோர் சாதாரண அளவைக் காட்டிலும் சுமார் 15 ரன்கள் அதிகமாக இருந்தது. 155 ரன்களே இருந்தாலும் போட்டி கடினமாக மாறியிருக்கும். பந்து வீச்சில் ஒவ்வொருவரும் பங்களித்ததை பார்க்க மிகவும் மகிழ்ச்சி. அணியாக சிறிது நேரம் ஒன்றாக செலவிட்டு, பின்னர் அகமதாபாத் செல்லும் விமானத்தில் மற்ற போட்டிகளை பற்றி யோசிப்போம்” என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button