திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான கற்கைநெறியை பூர்த்திசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான கற்கைநெறியை பூர்த்திசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபம்
லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான மூன்று மாத கால கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் சனிக்கிழமை (14.01.2026) அன்று ஸியம்பலாகஸ்கொடுவயில் அமைந்துள்ள அந-நூர் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை கஹட்டகஹமட சியம்பலாகஸ்கொடுவ ஜலாலிஹா பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன் பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் எம்.எல்.எம். ரவூப் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் அகில இலங்கை அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவரும் லைபொண்ட் நிறுவனத்தின் பணிப்பாளரும் ஆகிய அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸறூக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் H.R. Foundation னின் தலைவர் அல்ஹாஜ் முஹம்மத் ஜகீன் முஹம்மத் பெரோஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
லைப்பொண்ட் நிறுவனத்தின் இயக்குநர் அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன் அவர்கள் இக்கற்கை நெறியை பூர்த்தி செய்து வெற்றிகரமாக சித்தியடைந்த மாணவிகள் குறித்து மதிப்பீட்டுரை நிகழ்த்தினார். அதேவேளை லைப்பொண்ட் நிறுவனத்தின் முகாமையாளர் முஹம்மத் இர்ஷாத் அவர்கள் லைபொண்ட் நிறுவனம் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஸியம்பலாகஸ்கொடுவ அந் நூர் அரபிக் கல்லூரியின் அதிபர் உட்டப ஆசிரியர் குழாம் அனைவரும் மற்றும் கல்வியலாளர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட சித்தியடைந்த மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



