News
UPDATE > மேற்குக்கரையில் இஸ்ரேலின் சட்டவிரோத இருப்பை விரிவுபடுத்தும் ஆக்கிரமிப்பை வன்மையாக எதிர்க்கும் நாடுகளுடன் இலங்கையும் இணைந்து கையெழுத்திட்டது

இஸ்ரேலின் மேற்குக்கரை விரிவாக்கத்தைக் கண்டிக்கும் கூட்டுப் பிரகடனத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது.
பாலஸ்தீன ஐக்கிய நாடுகள் தூதரகம் வெளியிட்ட சமீபத்திய பட்டியலின்படி, கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை தற்போது 100-ஐத் தாண்டியுள்ளது.
ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 85 நாடுகளுள் இலங்கை இடம் பெறவில்லை, ஆனால் பாலஸ்தீன ஐக்கிய நாடுகள் தூதரகத்தினால் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது.



