News

மகா சங்கத்தினர் மாநாட்டிற்கு வருவார்கள்,  பின் கலைந்து செல்வார்கள், அதைத் தவிர
எதுவும் நடந்துவிடப்போவதில்லை. யார் தவறு செய்தாலும் அவர்கள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள் ; லால்காந்த அறிவிப்பு

(எம்.மனோசித்ரா)

மகா சங்கத்தினர் இம்மாநாட்டிற்கு வருவார்கள், அதன் பின் கலைந்து செல்வார்கள், அதைத் தவிர பெரிய அளவில் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. யார் தவறு செய்தாலும் அவர்கள் விமர்சனத்துக்கு உள்ளாவார் என்பது யதார்த்தமாகும் என அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (20) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மகா சங்கத்தினர் இம்மாநாட்டிற்கு வருவார்கள், அதன் பின் கலைந்து செல்வார்கள், அதைத் தவிர பெரிய அளவில் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. நாட்டில் யார் மீது வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம்.  மதகுருமார்களோ, அரச அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ தவறு செய்தால் அவர்கள் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள்.

இந்த மாநாட்டிற்கு 10,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், குறைந்தபட்சம் 1000 பேர் தான் கலந்து கொண்டிருக்கக் கூடும். தற்போது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை ஸ்திரமாகவுள்ளது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் மற்றும் ஜனாதிபதியின் செல்வாக்கு நிலையாகக் காணப்படுகிறது.

இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது எனக்குத் தெரியாது. அது ஒரு சாதாரண அழைப்பாக இருக்கலாம். முறையான அழைப்பு விடுக்கப்பட்டால் அவர் கலந்துகொண்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்கலாம் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button