News

தரமற்ற நிலக்கரியால் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என இனிமேலும் முகநூலில் கருத்துப் போர் நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை.

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டுக்கு 7,672.1 மில்லியன் ரூபா பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நஷ்டத்தை மறைக்க முற்படாமல் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் மக்கள் போராட்ட முன்னணியின் (Jana Aragala Sandhanaya) உறுப்பினர் புபுது ஜயகொட அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் விசேட குறிப்பொன்றை பதிவிட்டுள்ள அவர், இந்த நஷ்டம் குறித்த தகவல்களை இலங்கை மின்சார சபையே கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி நாடாளுமன்றத்தின் உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது அந்தப் அறிக்கை பின்வருமாறு:

“முகநூலில் உள்ள அரசாங்க ஆதரவாளர்களே,

தரமற்ற நிலக்கரியால் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என இனிமேலும் முகநூலில் கருத்துப் போர் நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை.

ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து இலங்கை மின்சார சபையினால் பெப்ரவரி 19ஆம் திகதி நாடாளுமன்றத்தின் உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 கப்பல் நிலக்கரி தரம் குறைந்ததாக இருந்ததால் ஏற்பட்டுள்ள நஷ்டம் 7,672.1 மில்லியன் ரூபா என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றை நியாயப்படுத்துவது (சுத்தம் செய்வது) எளிதானது அல்ல. தவறு நடந்துவிட்டதை ஒப்புக்கொண்டு, தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் சட்டத்தை அமுல்படுத்துவதே ஒரு சிறந்த அரசியல் கலாசாரத்தின் பண்பு என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மின்சாரக் கட்டணத்தில் சேர்த்து மக்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக, அந்த நஷ்டத்தை ஈடுசெய்வதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவோம்.”

Recent Articles

Back to top button