News
வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள், முன்னால் வந்த மோட்டார் கார் ஒன்றுடன் மோதியதில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு

தவலம – அக்குரஸ்ஸ வீதியில், தவலம சந்திப் பகுதியில் அக்குரஸ்ஸ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து, முன்னால் வந்த மோட்டார் கார் ஒன்றுடன் மோதியதில் நேற்று முன்தினம் (23) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் உடனடியாக ஹினிதும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் பின்னால் பயணித்தவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


