News

2026 இல் இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு டொலரில் வருமானம் குவிவதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தரவுகளுடன் அறிவித்தது

இலங்கையின் 2026 ஜனவரி மாதத்திற்கான மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 13.7 சதவீத வளர்ச்சியாகும் என அதன் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 1,165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10.5 வீத வளர்ச்சியாகும்.

சேவைத் துறை மூலம் 367 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 24.5 வீதம் என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளில் பிரிவுகள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளன.

குறிப்பாக தேயிலை, தேங்காய், இறப்பர், உணவு மற்றும் பானங்கள் முக்கிய பங்கு வழங்கியுள்ளன.

ஏனைய துறைகளில் மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், மரக்கறிகள், பழங்கள் மற்றும் கடல் உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சேவைத்துறையில் தகவல் தொழில்நுட்பத் துறை சேவை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கிறது.

மொத்தமாகப் பார்க்கையில், 2026 ஆம் ஆண்டின் ஆரம்பம் இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button