News

NPP யினரை பரீட்சித்துப் பார்க்கப் போய் தற்போது நாடு நாலாபுறமும் முட்டி மோதி நசுங்கியுள்ள நிலையில், சஜித் பிரேமதாசவை நாட்டின் தலைவராக பரீட்சித்துப் பார்க்க முன்வருமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுகிறேன் ; SJB உறுப்பினர்

பரீட்சித்துப் பார்க்காத ஒன்றைப் பரீட்சித்துப் பார்த்ததன் விளைவாக, தற்போது நாடு நாலாபுறமும் முட்டி மோதி நசுங்கியுள்ள நிலையில், சஜித் பிரேமதாசவைப் பரீட்சித்துப் பார்க்க முன்வருமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுகிறது SJB உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச இதுவரை எவ்வித கொலை, ஊழல் அல்லது மோசடி குற்றச்சாட்டுகளும் இல்லாத ஒரு தூய்மையான தலைவராவார்.

அவர் மீது சுமத்தப்படும் விமர்சனங்கள் யாவும் அவர் கிரிக்கெட் விளையாடியது, புகைப்படம் எடுத்தது, மழையில் நனைந்தது அல்லது ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் உரையாடியது போன்ற சாதாரண விடயங்கள் சார்ந்தவையே தவிர, அவை ஒரு தலைவருக்குரிய தகுதியீனங்கள் அல்ல.

மாறாக, ஜே.வி.பி போன்ற தரப்பினர் சிறுவயதில் விளையாட்டுகளோ, கலையோ அல்லது முறையான கல்வியோ இன்றி வளர்ந்ததால் அவர்களுக்கு ரசனை உணர்வோ அல்லது மனிதநேயமோ கிடையாது. அவர்கள் காட்டிற்குச் சென்றது இராணுவத்திற்குப் பயந்து ஒளிந்து கொள்வதற்காகவே அன்றி, இயற்கையை ரசிப்பதற்காக அல்ல.

ஆனால், சஜித் பிரேமதாச மக்கள் மழையில் நனையும்போது தானும் அவர்களோடு இணைந்து நனையும் அளவிற்குச் உணர்வுப்பூர்வமானவர். எனவே, மதங்களையும் மனிதநேயத்தையும் மதிப்பவராகவும், கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்தவராகவும் விளங்கும் சஜித் பிரேமதாச எனும் ஆளுமையைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, அவரை ஒருமுறை பரீட்சித்துப் பார்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என SJB உறுப்பினர் துஷார இந்துனில் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button