News

பிரதேசத்தில் உள்ள பல பெண்களுக்கு நீண்டகாலமாக பாலியல் தொந்தரவுகளைக் கொடுத்து வந்த நபர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவருக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய திருமணம் முடிக்காத நபர் ஒருவர் நீண்டகாலமாகத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவுகளை வழங்கி வந்துள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட யுவதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், நேற்று (27) சந்தேகநபரை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, அவர் அந்தப் பகுதியில் உள்ள பல பெண்களுக்கு நீண்டகாலமாக இவ்வாறு பாலியல் தொந்தரவுகளைக் கொடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button