News
ஈரான் சமாதானத்திற்கு இணங்கவில்லை என்பதால் தான் தாக்குகிறோம் – நான்கு நாட்களுக்கு தாக்குவோம் என டோனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமாதானத்துக்காக பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அதற்கு ஈரான் இணங்கவில்லை. எனவே, தாக்குதலை ஆரம்பித்ததாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரானின் 5 நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்பஹான்,கோம், கராஜ் மற்றும் கர்மன்சா இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல்கலைக்கழகத் தெரு மற்றும் குடியரசுப் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த போரானது, நான்கு நாட்கள் தொடரும் எனவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.



