News
ஈரானும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி திருப்பி அடிக்க ஆரம்பித்தது – பதுங்கு குழிகளுக்குள் செல்லுமாறு மக்களை கோரியது இஸ்ரேல்

இஸ்ரேல் இன்று (28) காலை ஈரான் மீது நடத்திய தாக்குதலையடுத்து ஈரான் சற்று முன்னர் இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஈரான் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து இஸ்ரேலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது . ஈரான் ஏவுகணைகள் தாக்கலாமென்பதால் பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருக்குமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர் .



