பஹ்ரேனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்திய ஈரான், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து

அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதல்களையடுத்து மத்தியகிழக்கில் பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது.
ஈரான் மேற்குப் பகுதியில் தற்போது இஸ்ரேலின் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், இஸ்ரேலின் மீது தாக்குதலை தொடுக்க ஈரான் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டார், டுபாய், குவைத் தங்களது வான் பரப்பபை மூடியுள்ளன.
பஹ்ரேனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
இதனால் அங்கு பல வெடிப்புச் சம்பங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரான் மற்றும் இஸ்ரேல் வான் பரப்பினுடாக செல்லும் ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் விமானங்கள் மாற்று வழியை பயன்படுத்துவதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைகளிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியிலுள்ள அமெரிக்க தளங்களும் ஈரானால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள அனைத்து அமெரிக்க படைத் தளங்களும் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், செங்கடலில் தாக்குதலை நடத்தப் போவதாக யேர்மனிலுள்ள ஹவுதீஸ் அமைப்பு அறிவித்துள்ளது



