News

ஈரானில் ஏற்பட்டுள்ள தீவிர இராணுவ நடவடிக்கையின் காரணமாக அங்கிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது ; சஜித்

ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.



ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இந்த பதிவை இட்டுள்ளார்.



ஈரானில் ஏற்பட்டுள்ள தீவிர இராணுவ நடவடிக்கையின் காரணமாக அங்கிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.



அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என என எதிர்கட்சித்தலைவர் கோரியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button