News
நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு

அனுராதபுரம் மற்றும் வவுனியா இடையிலான மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
இந்தக் கோளாறு காரணமாக தேசிய மின் கட்டமைப்பின் அலைவரிசையில் (frequency) ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக களனிதிஸ்ஸ கூட்டுச் சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திலுள்ள (Kelanitissa Combined Cycle Power Plant) நீராவி விசையாழி (steam turbine) செயலிழந்து கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 55 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் இழக்கப்பட்டதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.



