News

“எமது நாடு எளிதில் வேட்டையாடப்படக்கூடிய இரையல்ல”

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஈரான் மீது மறைமுகமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது நாடு “எளிதில் வேட்டையாடப்படக்கூடிய இரையல்ல” என்று அவர் தெரிவித்ததுடன், தெஹ்ரானை (ஈரான்) “எதிரி” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் தனது அண்டை நாடான ஈரானை நோக்கிப் பொதுவாகப் பயன்படுத்தும் மொழியிலிருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.

“ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிரிக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்பினேன்” என்று அதிபர் கூறினார்.

தாக்குதல்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆற்றுப்படுத்திய போது, ஈரானை எச்சரிக்கும் வகையில் அவர் கூறியதாவது:

“ஐக்கிய அரபு அமீரகம் அழகானது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரி; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், அதைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.”

“ஐக்கிய அரபு அமீரகத்தின் கரம் எங்கும் எட்டக்கூடியது மற்றும் வலிமையானது. எமது சதை கசப்பானது, நாங்கள் அவ்வளவு எளிதில் இரையாக மாட்டோம்.”

போர் தொடங்கிய பின்னர் அவர் வெளியிடும் முதல் கருத்துக்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. பாரசீக வளைகுடா பகுதிகளில் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஈரானிய அதிபர் அன்று காலை தெரிவித்திருந்த போதிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை ஏவுகணை அச்சுறுத்தலை முறியடித்த சில நேரத்திலேயே அதிபரின் இந்த உரை ஒளிபரப்பப்பட்டது.

“எங்கள் தேசம், எமது மக்கள் மற்றும் எங்களுடன் வாழ்பவர்களுக்காக நாங்கள் எமது கடமையைச் செய்து வருகிறோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button