News

ஈரான் முற்றுமுழுதாக சரணடைந்துவிட்டதாகவும் இனிமேல் ஈரான் மத்திய கிழக்கின் தோல்வியுற்ற நாடு எனவே டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவிப்பு

ஈரான் முற்றுமுழுதாக சரணடைந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



அவர் இன்று மேலும் கூறியுள்ளதாவது,



தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் ஈரான், மன்னிப்பு கேட்டு, அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது.



மேலும் இனி அவர்கள் மீது தாக்கமாட்டேன் என்று உறுதியளித்துள்ளது.



இந்த வாக்குறுதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இடைவிடாத தாக்குதலின் காரணமாக மட்டுமே வழங்கப்பட்டது.



அவர்கள் மத்திய கிழக்கைக் கைப்பற்றி ஆட்சி செய்ய முயன்றனர்.



ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் தோற்றது இதுவே முதல் முறை.



அவர்கள், ‘நன்றி ஜனாதிபதி டிரம்ப்’ என்று கூறியுள்ளனர்.



உங்களை வரவேற்கிறோம்!’ என்று நான் கூறியுள்ளேன்,



ஈரான் இனி ‘மத்திய கிழக்கின் கொடுமைக்காரன்’ அல்ல.



மாறாக, அவர்கள், மத்திய கிழக்கின் தோல்வியுற்றவர்கள்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button