News
நேற்று இரவு ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள், நீர் நிலைகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பாரிய தாக்குதல்களை நடத்திய நிலையில் இன்றும் அதைவிட பாரிய தாக்குதல்களை நடத்துவோம் என அமெரிக்கா அறிவித்தது

அமெரிக்கா, இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து கடந்த 28ஆம் திகதி முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும் இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்தும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று (07) இரவு ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது.
இவ்வாறிருக்க ஈரான் மீது இன்று கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எள்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஈரான் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் எனவும் ட்ரம்ப் கூறிவருகிறார். ஆனால், சரணடையப் போவதில்லை என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது



