News

மத்திய வங்கியில் திருட்டு – ஆறு பேர் கைது

கொழும்பு கோட்டை, இலங்கை மத்திய வங்கியின் பழைய 16 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்னல் கடத்தி அமைப்பிலிருந்து சுமார் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான செப்பு கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில், ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஆறு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களால் திருடப்பட்ட கம்பிகளில் சுமார் 30 கிலோகிராம் எடையுள்ள கம்பிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருடப்பட்ட செப்பு கம்பிகள் 288 மீட்டர் நீளம் கொண்டவை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவர் பெப்ரவரி 27ஆம் திகதி கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button