News
ஈரானின் அடி – இதுவரையில் 1929 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சு அறிவித்தது

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் ஆரம்பித்து ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், இதுவரையில் 1929 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களுள் 122 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுள் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இவர்களில் சிலர் ஏவுகணைத் தாக்குதல்களால் நேரடியாகப் பாதிக்கப்படாமல் வேறு காரணங்களால் காயமடைந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மட்டும் 157 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



