News
போரின் முடிவை நாங்களே தீர்மானிப்போம் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவிப்பு – அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால், (வளைகுடா)பிராந்தியத்தில் இருந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என மேலும் தெரிவிப்பு

மத்திய கிழக்கில் போர் “விரைவில்” முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, போரின் முடிவை தாங்களே “தீர்மானிப்போம்” என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
“போரின் முடிவை நாங்களே தீர்மானிப்போம்” என்று IRGC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“பிராந்தியத்தின் சமன்பாடுகள் மற்றும் எதிர்கால நிலை இப்போது எங்களது ஆயுதப்படைகளின் கைகளில் உள்ளது; அமெரிக்கப் படைகள் போரை முடிக்காது,” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால், பிராந்தியத்தில் இருந்து “ஒரு லிட்டர் எண்ணெய்” கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று IRGC கூறுகிறது.

