News
இலங்கை சுங்கத் திணைக்களம் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானத்தை பெற்றது.
இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை அடைந்துகொள்ள முடியும் என்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.