News

கஞ்சன விஜேசேகர கொண்டுவந்த QR முறைமையை செயற்படுத்த வேலை தெரியாத அரசுக்கு இரண்டு வாரங்கள் எடுத்துள்ளது.

காஞ்சன விஜேசேகர கொண்டுவந்த QR முறைமையை செயற்படுத்த வேலை தெரியாத அரசுக்கு இரண்டு வாரங்கள் எடுத்துள்ளது என பொதுஜன பெரமுன குண்டசாலை அமைப்பாளர் ரிஷாத் மஃரூப் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்.தான் பொய் என்றால் மட்டுமே பாராளுமன்றத்தில் பேசுவதாக கூறிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக எரிபொருள் கையிருப்பு இருப்பதாக பாராளுமன்றில் கூறியதை மக்கள் பொய் என நினைத்து எரிபொருளை சேமிக்க ஆரம்பித்தார்கள்.அதனால் தான் நுகர்வு அதிகரித்து நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக கஞ்சன விஜேசேகர QR முறைமையை கொண்டுவந்த போது அதை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அதே முறையை அமுல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முறையான தொலைநோக்கு திட்டம் இல்லாத அரசு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த QR முறைமையை கொண்டுவந்திருந்தால் விலை அதிகரிப்பை செய்யாமல் இருந்திருக்கலாம் என ரிஷாத் மஃரூப் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button