News
ஈரான் நமது நாட்டிற்கு எந்த தீங்கையும் செய்யாமல் நாம் (அமெரிக்கா) அவர்கள் மீது தாக்கியதை என் மனசாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்து அமெரிக்க உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி இராஜினாமா

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோ கென்ட், தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்:
“ஈரானில் நடந்து வரும் போரை என்னால் மனசாட்சி உறுத்தாமல் ஆதரிக்க முடியாது.
ஈரான் நமது நாட்டிற்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. மேலும், இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க ஆதரவுக் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகிறது.”
என்று அவர் தனது பதவி விலகலுக்கான காரணத்தை குறிப்பிட்டுளளார்.



