News

உங்களது வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை இலக்கம் என்றால் இன்று வீடுகளுக்கு சென்று நிம்மதியாக தூங்குங்கள் நாளை உங்களுக்கு நிச்சயம் எரிபொருள் கிடைக்கும் ..

QR முறைமை நடைமுறைக்கு வந்த பின்னரும் எரிபொருள் வரிசை அதிகமாக காணப்படுவதாக பொற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் டி ஜே ராஜகருனா கூறினார்.

எரிபொருள் விநியோக அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரட்டை எண்கள் கொண்ட திகதிகள் (02, 04, 06…): வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் 0, 2, 4, 6, 8 என முடிவடையும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனவும் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகள் (01, 03, 05…): வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் 1, 3, 5, 7, 9 என முடிவடையும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உங்களது வாகன தகடின் கடைசி இலக்கம் ஒற்றை இலக்கம் என்றால் இன்று வீடுகளுக்கு சென்று நிம்மதியாக தூங்குங்கள் நாளை தடையில்லாமல் எரிபொருளை பெற்றுக்கொள்வதை நாம் உறுதிசெய்கிறோம்.

இம்மாதம் ஓடர் செய்யப்பட்டுள்ள அனைத்து கப்பல்கள் நாட்டுக்கு வருவது உறுதியாகியுள்ளது எனவும் தடையற்ற எரிபொருள் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button