நாட்டில் தற்போது எவ்வித நிதி நெருக்கடியும் ஏற்படவில்லை – 2022 இல் ஏற்பட்ட நெருக்கடி நிலையுடன் இதனை ஒப்பிட வேண்டாம் ; தொழில் அமைச்சர்

நாட்டில் தற்போது எவ்வித நிதி நெருக்கடியும் ஏற்படவில்லை என தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடானது ஒரு வெளிப்புறக் காரணியினால் ஏற்பட்டதாகும்.
அரசாங்கம் இதனை மிகவும் வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்து வருகின்றது.
நாட்டில் உள்நாட்டு ரீதியான நிதி நெருக்கடி ஒன்று காணப்படுமாயின், அரசாங்கத்தின் வருமானம் குறைந்திருக்க வேண்டும் அல்லது திறைசேரியில் செலவுகளுக்குப் நிதியில்லாதிருக்க வேண்டும்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையானது தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகள், மோசடி மற்றும் ஊழல்களினால் ஏற்பட்டதாகும்.
ஆனால், தற்போதைய நிலைமை ஒரு வெளிப்புற விநியோகச் சங்கிலி நெருக்கடியாகும்.
இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்க வேண்டாம் என தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



