News

பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவர் விரைவில் சஜித் பக்கம் தாவுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க மலையகத்தில் இயங்கும் பிரதான அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் முன்வரவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தேசிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த பலம் வாய்ந்த அரசியல்வாதி தற்போதைய அரசாங்கத்தில் அதிகாரமிக்க அமைச்சுப் பதவியை வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மலையகத்தின் பலமான தொழிற்சங்க தலைவராகவும் விளங்கும் இந்த அமைச்சரின் தலைமுறை மலையக அரசியலில் உயர் பதவிகளை வகித்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த பலமான அரசியல்வாதி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவது எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் இடம்பெறலாம் எனவும் அந்த நாளிதழ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Recent Articles

Back to top button