மூன்று வார குறுகிய காலத்தில் இலங்கையில் 36 % பெற்றோல் விலை அதிகரிப்பு !

வலைகுடா யுத்தத்தை அடுத்து உலகின் சில நாடுகளில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் கடந்த 3 வார காலத்திற்குள் 36 வீதத்தினால் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ம் திகதி 92 ஒக்டேன் பெற்றோல் 292 ரூபாவில் இருந்து 293 ஆக அதிகரிக்கப்பட்டது.பின்னர் மார்ச் 09ம் திகதி 24 ரூபா விலை அதிகரிக்கப்பட்டு 317 ஆக காணப்பட்டது. இன்று 21ம் திகதி 81 ரூபா விலை அதிகரிக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்று வார குறுகிய காலத்திற்குள் 92 ஒக்டெயின் பெற்றோல் விலை 36% வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச ஊடக தகவல்கள் படி இது ஆசியாவின் மிகப்பெரிய விலை அதிகரிப்பாகும். ஆசியாவில் வியட்னாம் 50 % மற்றும் பாகிஸ்தானில் 23% அதிகபட்சமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.உலகின் 3 வது மிகப்பெரிய விலை அதிகரிப்பகும்.அதிகபட்சமாக கம்போடியாவில் 68 % வீதத்தினாலும் வியட்னாமில் 50 % வீதத்தினாலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டது.



