News

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் “நேரடியான அல்லது மறைமுகமான எந்தத் தொடர்பும் இல்லை “

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் “நேரடியான அல்லது மறைமுகமான எந்தத் தொடர்பும்” இல்லை என்று ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி (IRGC) உடன் தொடர்புடைய ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது. ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக ட்ரம்ப் கூறியதை அது நிராகரித்துள்ளது.

“ட்ரம்ப்புடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு எதுவும் ஏற்படவில்லை” என்று ஈரானிய ஆதாரத்தை மேற்கோள் காட்டி ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும்” ஈரான் இலக்கு வைக்கும் என்று எச்சரிக்கப்பட்டதை அடுத்து, ட்ரம்ப் தனது முடிவிலிருந்து “பின்வாங்கியதாக” அந்த ஆதாரம் மேலும் தெரிவித்தது.

முன்னதாக, வாஷிங்டனும் தெஹ்ரானும் “மிகவும் சிறப்பான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல்களை” நடத்தியதாக ட்ரம்ப் கூறியிருந்தார். மேலும், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்க அவர் உத்தரவிட்டிருந்தார்.

Recent Articles

Back to top button